என் இனிய தோழர்களே தோழிகளே,
கரிசல்காட்டுகாரனின் வணக்கம்
ரொம்ப சுத்த தமிழ்ல ஆரம்பிசிடேனோ???. நான் ஏன் என்னுடைய blog கு இந்த பெற வெச்சேன்னு சொல்லி ஆகணும். என்னுடைய ஊர் விஜயரங்கபுரம். கி.ரா.எழுதினாரே அந்த கரிசல் காட்டு ஏரியா. blog caption கரிசல் காட்டிலிருந்து கம்ப்யூட்டர் வரைன்னு வெச்சேன் அதுக்கும் காரணம் சொல்லி ஆகணுமே. சின்ன வயசு பூரா ஊர்ல புளிதில புரண்டேன். அப்றோம் schoolku கொஞ்சம் பெரிய townku போனேன் அப்றோம் காலேஜ்கு இன்னும் கொஞ்சம் பெரிய ஊர். அப்றோம் வீட்ல எல்லாரும் சந்தோஷ படர மாறி software engineer ஆய்ட்டேன். வாழ்க்கைல கலவையா பல சூழ்நிலைகளை பாத்துருக்கேன் காலேஜ் படிக்கும் போது வெள்ளி கிழமை national level conference organaize பண்ணுவேன் அடுத்த நாள் எங்க ஊர்ல உழவர் கூட்டம் அட்டென்ட் பண்ணுவேன். collegela juniorsku hacking பற்றி class எடுப்பேன் அடுத்த வாரம் ஊர்ல வந்து இயற்கை உரம் பத்தி பெருசு கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குவேன். விப்ரோ ப்ராஜெக்ட் மேனேஜர் கிட்ட பேசிட்டு அடுத்து என் தாத்தாக்கு போன் பண்ணி மகாபாரதம் பத்தி பேசுவேன். இந்த மாதிரி கலவையான என்னோட வாழ்க்கைதான் என்னை இந்த blog உருவாக்க தூண்டிச்சு நாம இந்த ப்ளாக் ல எதபத்தி வேணாலும் பேசலாம் கிராம வாழ்க்கை, லேட்டஸ்ட் டெக்னாலஜி, சினிமா அரசியல்,ஜோக்ஸ்,எல்லாம்............என்ன வேணா கேளுங்க வாங்க பழகலாம்